செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (07:56 IST)

அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் முதலீடு – கேஜிஎஃப் நிறுவனம் அறிவிப்பு!

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Hombale Films என்ற நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகியுள்ளது.  இந்த ஆண்டு அந்த நிறுவனம் மற்றொரு படமான காந்தாரா மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.

இதையடுத்து பல மொழிகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்களை தங்கள் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டில் ஹோம்பலே நிறுவனம் அடுத்த 5 ஆண்டில் சுமார் 3000 கோடி ரூபாயை இந்திய சினிமாவில் முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.