முடங்கும் ஹாலிவுட்.. எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நடிகர்களும் வேலை நிறுத்தம்!
ஹாலிவுட்டில் கடந்த மே மாதம் முதல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இப்போது அவர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக அமெரிக்க நடிகர் சங்கமும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக குரல்கள் எழுந்து வருகின்றன. இதையடுத்து இப்போது நடிகர்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் AI நுழைவை சினிமாவில் தடுப்பதற்காக இணைந்துள்ளார்.
படங்களில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை ஒருமுறை ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு பின்னர் படம் முழுவதும் அதைப் பயன்படுத்திக் கொள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் இந்த போராட்டம் வெடித்துள்ளது. இதனால் இப்போது சுமார் 63 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாலிவுட் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.