செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 16 மே 2024 (19:09 IST)

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள ’பிடி சார்’ என்ற திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
பிடி வாத்தியார் கேரக்டரில் நடித்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி திடீரென ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்வதாகவும் இதனை அடுத்து போலீஸ் அவரை கைது செய்யும் நிலையில் அந்தப் பிரச்சினையில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது 
 
பொதுவாக பள்ளிகளில் பிடிவாதியாரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் பிடி பீரியட் மற்றும் பிடி வாத்தியாரின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் அம்சம் கொண்ட படமாக இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது
 
ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மீரா நடித்திருக்கும் இந்த படத்தில் பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, தியாகராஜன், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Siva