செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (20:45 IST)

இளையராஜாவின் பயோபிக் படத்தின் இயக்குனர் இவர்தான்!

தன் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க,  இசைஞானி இளையராஜா ஒப்புக்கொண்டதாக  தகவல் வெளியாகிறது.

தன் வாழ்க்கை வரலாறு படத்தினை இளையராஜாவே தயாரிக்கவுள்ளதால், இயக்குனரையும் அவரே தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனவே தனுஷ், அருண்மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் இருவரையும் இளையராவிடம் அனுப்பி வைத்தடஹகவும், இவரிடமும் இளையராஜா பேசினார்.

இந்த  நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க  அவர் ஒப்புக்கொண்டதாக  தகவல் வெளியாகிறது.
 
சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகும் தகவலின்படி, இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்று  படத்தை இயக்க அருண்மாதேஸ்வரனை தேர்வு செய்துள்ளார்.
 
இந்த நிலையில், இளையராஜா, அருண்மாதேஸ்வரனிடம்  ''இப்படத்தை தொடங்கும் முன்னதாக, தன்னுடன் 2 மாதம் டிராவல் பண்ணும்படியும்,   இதன் மூலம், தன் பழைய நினைவுகளையும், சம்பவங்களையும் நினைவு கூற ஒரு வாய்ப்பாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அருண்மாதேஸ்வரன், இசைஞானி இளையராஜாவுடன் டிராவல் செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.
 
தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.