செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (14:19 IST)

'தங்கலான்': அவருக்கு இந்த டீசர் பிடிக்கவே இல்லை- பா.ரஞ்சித் ஓபன் டாக்

THANGALAN
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திர்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அறிவித்தபடி இன்று வெளியாகி சினிமா ரசிகர்களின் மத்தியில்  ஆ வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசரில் விக்ரமின் நடிப்பு மற்றும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தை பாராட்டி வருகின்றனர்.

இன்று இப்பட டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய பா.ரஞ்சித், இப்பட பட்ஜெட் கூறியதை விட அதிகாமனது. ஆனால், ஞானவேல்ராஜா என்னை கோபமாகக் கூட பார்க்கவில்லை. அவருக்கும் எனக்குமான  உறவு அட்டகத்தி முதல் தங்கலான் வரை 10 ஆண்டுகள் நீடிக்கிறது. அவரது உதவி இப்படத்திற்கு முக்கியமானது. என்னை அவர்  நம்பியிருக்கிறார். அதை என் படைப்புகளில் நான் காட்டியிருக்கிறேன்.

அவர் கமர்சியல் புரடியூசர் அதனால் இப்பட டீசரை வேறுமாதிரி கட் பண்ண சொன்னார். ஆனால் அவருக்கு நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்று இந்த டீசரை கட் செய்தேன். அவரும்  நன்றாக இருக்கிறது என்றார். விக்ரமுடன்  சேர்த்து பணியாற்ற வேண்டுமென இத்தனை நாள் வெயிட் பண்ணினேன். இந்த படத்தில் அமைந்துவிட்டது ‘’ என்று தெரிவித்துள்ளார்.