திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (08:56 IST)

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்!

ஹாரிபாட்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் ராபி கோல்ட்ரேன்.

1950 ஆம் ஆண்டு பிறந்த அவர் மேடை நாடகங்கள் வழியாக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் கால்பதித்தவர். பல படங்களில் நடித்துள்ள அவருக்கு ஹாரி பாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற உதவியது. இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்ததாக அவரின் ஏஜெண்ட் உலகுக்கு அறிவித்துள்ளார். ராபிக்கு வயது 72 ஆகும்.

இந்த செய்தி ஹாலிவுட் மற்றும் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹாரி பாட்டர் வரிசை புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் ஜே கே ரௌலிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.