ராஜபாளையம் நாய் மீது ஜிவி'க்கு இவ்வளவு பிரியமா...? ட்ரெண்டாகும் குறும்படம்!
ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகி தரமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர். இந்த ஜோடியின் காம்போவில் உருவான அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். கடைசியாக அசுரன் படத்தில் இடம்பெற்ற "எள்ளு வய பூக்கலையே" என்ற பாடல் ஜிவி இசையில் சைந்தவி தன் காந்தம் போன்ற குரலால் அனைவரையும் ஈர்த்துவிட்டார். இதற்கிடையில் அண்மையில் தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்ப்போது ஜிவி பிரகாஷ் லாக்டவுனில் " ஹேப்பி தி ராஜபாளையம்" என்ற வித்யசமான குறும்படம் ஒன்றை உருவாக்கி யூடியூபில் வெளியிட்டுள்ளார். அவர் வீட்டில் வளர்த்து வரும் ராஜபாளையம் நாயனா "ஹேப்பி"யை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அந்த அழகிய குறும்படத்தின் முழு வீடியோ இதோ...