வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (11:14 IST)

வலிமை கதையை வேறொரு ஹீரோவுக்காக எழுதினேன்… ஹெச் வினோத்!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அடுத்தடுத்து டீசர் மற்றும் டிரைலரை அடுத்த வாரம் மற்றும் அதற்கடுத்த வாரத்தில் முன்னறிவிப்புகள் எதுவும் இன்றி திடீரென்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள படத்தின் இயக்குனர் வினோத் வலிமை உருவான விதம் குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘நான் எழுதிய இரண்டாவது கதை இதுதான். முதலில் வேறொரு கதாநாயகனுக்காக எழுதி இருந்தேன். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு இப்போது வேறொரு கதையாக மாற்றியுள்ளேன். கதையில் என் தரப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை.’ எனக் கூறியுள்ளார்.