1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:53 IST)

ரசிகர்களுக்கு இது தேவையில்லாத வேலை: இயக்குனர் எச் வினோத்

H Vinodh
ரசிகர்கள் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என துணிவு இயக்குனர் எச் வினோத் தெரிவித்துள்ளார். 
 
அவர் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் கொடுக்கும் போது ’ரஜினி கமல் உள்ளிட்ட பெரிய ஸ்டார்களின் ரசிகர்கள் அவர்களுக்காக செலவழிக்கும் நேரம் மிக மிக மிக அதிகமாகும். 100 கோடி கொடுத்தால் கூட அந்த புரமோஷனை யாராலும் பண்ண முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் நேரம் செலவு செய்து அவர்களுடைய படங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்.
 
ஆனால் ரசிகர்கள் இந்த அளவுக்கு சினிமாவுக்காக நேரத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அந்த படம் பற்றி சிலவற்றை பேசி விட்டு அதன் பிறகு படம் பார்த்து படம் நன்றாக இருந்தால் பாசிடிவ் விமர்சனம் நன்றாக இல்லை என்றால் வேறு படத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்றும் ரசிகர்கள் சினிமாவுக்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
 
Edited by Siva