திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:50 IST)

அஜித் அரசியலுக்கு வருவாரா? எச் வினோத் அளித்த பேட்டி!

H Vinodh
நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்த தகவலை அவரது துணிவு படத்தை இயக்கிய எச் வினோத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை எச் வினோ இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எச் வினோ, அஜித் அரசியல் குறித்து யாராவது பேசினால் உடனடியாக அந்தப் பேச்சையே தவிர்த்து விடுவார் என்றும் மேலும் அரசியல் குறித்து தன்னிடம் யாரும் பேச வேண்டாம் என அறிவுறுத்துவார் என்றும் கூறியுள்ளார்
 
நான் இதுவரை அஜித்திடம் அரசியல் குறித்து பேசவில்லை என்றும் அது மட்டுமின்றி அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து அவர் யாரிடமும் பேசி நான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva