ஜிவி பிரகாஷின் அடுத்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
ஜிவி பிரகாஷ் நடித்த ஒரு சில திரைப்படங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்று பேச்சிலர் திரைப்படம்
இருப்பினும் இந்த படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பேச்சிலர் திரைப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட நிலையில் சென்சார் அதிகாரிகள் இன்று இந்த படத்தை பார்த்து படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ள இந்த படத்திற்கு இந்த படத்தை சதீஷ் குமார் என்பவர் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்