1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:10 IST)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ்!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.


 
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சேலம் மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் தமிழ் அமைப்புளுடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ், பாடகர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இது குறித்து ஜி.வி,பிரகாஷ், பாரம்பரியமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுக்குக்காக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.