ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 7 மே 2016 (17:29 IST)

கவுண்டமணியின் கேரவன் பாடல்

கவுண்டமணியின் கேரவன் பாடல்

கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்தப் படத்தில் மாஸ் நடிகர்களைப் போன்று கவுண்டமணிக்கு அறிமுகப் பாடல் உள்ளது.


 
 
இதில் கேரவன் உரிமையாளராக கவுண்டமணி நடித்துள்ளார். அதனால், ஒரு பாடல் காட்சியை முழுக்க கேரவனுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார், இயக்குனர் கணபதி பாலமுருகன்.
 
கேரவனின் நீளம் 200 அடிக்கும் குறைவு. அதற்குள் கேமரா வைத்து படமாக்குவது கடினம். இவர்கள் ஒரு பாடலை கேரவனுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்கள். 
 
கேரவன் என்ற குண்டு சட்டிக்குள் ழுகுதிரையோட்ட கவுண்டமணி எப்படி சம்மதித்தார் என்பதுதான் ஆச்சரியம்.