’’விரைவில் நல்ல செய்தி’’.... விஜய்யின் மாஸ்டர் படக்குழு அறிக்கை வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாடிப் பார்ப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நீங்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாவது குறித்து நீங்கள் பெரிய ஆர்வத்துடன் இருப்பதைப் புரிந்துகொள்கிறோம். அதற்கு ஒரு பெரிய நாளுக்காக நாங்களும் உங்களுடம் காத்திருக்கிறோம். கடந்த சில நாட்களாக வதந்திகள் நிறையப் பரவிவருகிறது. அதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஒடிடியில் இருந்து வெளியிடகூறி வேண்டுகொள் வந்தது ஆனால் தற்போது தமிழ் திரயுலகம் இக்கட்டான நிலையில் உள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு தியேட்டர் ஓனர்களுடம் கலந்து பேசி அவர்களையும் எங்களுக்கு ஆதரவாக நின்று திரைத்துறைக்கு உதவும் படி கேட்டுகொண்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் நல்ல செய்தியாக வெளியாகும். பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்து தயாரிப்பாளர் தரப்பு தியேட்டரில்தான் மாஸ்டர் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.