செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (12:56 IST)

விஜய்யின் ‘கோட்’ படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’ உள்ளது: விசிக எம்பி ட்விட்..!

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அரசியல்வாதிகளிடமிருந்து இந்த படம் குறித்து எந்தவித கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் வெளியானவுடன் அனைத்து அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாக இந்த படத்தை பாராட்டிய நிலையில் ‘கோட்’ திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் கருத்து சொல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தனது சமூக வலைதளத்தில் ‘கோட்’ படத்தின் டைட்டிலில் சனாதன கருத்து உள்ளது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
 
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 
 
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! 
 
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
 
 
Edited by Mahendran