வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:01 IST)

புதிதாக ஓடிடி தொடங்கும் தமிழ் தயாரிப்பு நிறுவனம்!

தமிழில் இப்போது புதிது புதிதாக ஓடிடி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகள் இயங்கியது சில மாதங்களே. கொரோனா காரணமாக திரையரங்குகள் இயங்குவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஓடிடியில் வெளியான படங்கள் சில நல்ல வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்கில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இழந்துவிட்டதாகவும் ஏக்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

ஆனாலும் இப்போது புதிதாக பிராந்திய மொழிகளிலும் ஓடிடிகள் தொடங்கப் பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனம் புதிதாக தமிழில் ஓடிடி நிறுவனம் தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாம்.