வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (17:34 IST)

வெளியே போய் எல்லாரையும் செஞ்சிருவேன்: முழுசா சந்திரமுகியா மாறும் காயத்ரிய பாருங்க!

வெளியே போய் எல்லாரையும் செஞ்சிருவேன்: முழுசா சந்திரமுகியா மாறும் காயத்ரிய பாருங்க!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள காயத்ரிக்கு தன் மனசுல பெரிய ரௌடினு நினைப்பு. எப்ப பார்த்தாலும் அடிச்சிருவேன், வெளிய வந்தா கை கால்களை ஒடைச்சிருவேன் என ரௌடித்தனமாகத்தான் பேசி வருகிறார்.


 
 
இன்னொரு பக்கம் வாயை திறந்தால் கெட்ட வார்த்தை போடுவது. இதுவே நான் ரொம்ப குறைத்திருக்கிறேன் என பெருமைப்படுகிறார். இதுல காயூ பேபி ஒரு குழந்தை மாதிரி என ஷக்தியும், கணேஷும் கூறி நிகழ்ச்சியை பார்ப்பவர்களை வெறுப்பேற்றுகிறார்கள்.
 
இந்நிலையில் இன்று வெளியான பிக் பாஸ் புரோமோ வீடியோவில் காயத்ரி மீண்டும் தனது ரௌடித்தனமான பேச்சை ஆரம்பிக்கிறார். பிக் பாஸ் வீட்டில் உள்ள வழக்கமான பொழுதுபோக்கு ஒருவரை பற்றி ஒருவர் புறம் பேசுவது. இதில் இன்று சினேகன் புதிதாக வந்திருக்கும்  ஹரிஷ் கல்யானுடன் ஆரவ் பற்றி புறம் பேசுகிறார்.
 
இன்னொரு பக்கம் காயத்ரியும் ஆரவும் சேர்ந்து சினேகன் குறித்து புறம் பேசுகிறார்கள். அதில் காயத்ரி சினேகன் குறித்து மிகவும் ஆவேசப்படுகிறார். அவர் பொய் பேசுகிறார், குரூப் ஃபார்ம் செய்து எல்லாரையும் பிரிக்கிறார் என ஆரவிடம் பேசுகிறார்.

 

 
 
அப்போது ஆரவும் அதற்கு ஜிங்ஜாங் போடும் விதமாக சினேகன் குறித்து வாய் இல்லனா எதுவுமே இல்லை என கூறுகிறார். அதன் பின்னர் ஆரவ் சனிக்கிழமைக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிடும் என கூற, சரி ஆகலன்னா வெளியேப்போய் எல்லாரையும் செஞ்சிறுவேன் என பிரபல ரௌடி மாதிரி மிரட்டல் விடுக்கிறார் காயத்ரி. காயூ பேபி எப்படி பேசுதுன்னு பாருங்க மக்களே!.