ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (10:01 IST)

வாரணம் ஆயிரம் படத்தின் மறுவடிவம்தான் இந்த படம்… கௌதம் மேனன் பகிர்ந்த ரகசியம்!

நவரசா ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கிடார் கம்பி மேலே நின்று திரைப்படமும் இணைந்துள்ளது.

மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்த ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு கிடார் கம்பி மேலே நின்று படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சூர்யா இசைக்கலைஞராக நடித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் ‘வாரணம் ஆயிரம் படத்தில் இளம் வயது சூர்யா ராணுவத்துக்கு செல்லாமல் இசைக்கலைஞராக தொடர்ந்திருந்தால் எப்படி இருப்பாரோ அதுதான் இந்த கதை என சொல்லலாம்’ எனக் கூறியுள்ளார்.