கௌதம் மேனன் படத்துக்கு மியூசிக் டைரக்டர் அவர் இல்லையாம்! இவர்தானாம்!!
கௌதம் மேனன் இயக்கி வரும் “ஜோஸ்வா இமை போல் காக்க” திரைப்படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில், வருண் மற்றும் அறிமுக நடிகை ராஹே ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜோஸ்வா, இமை போல் காக்க”. இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ”என்னை நோக்கிப் பாயும் தோட்டா” திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா தான் இசையமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா இல்லை எனவும் ,பாடகர் கார்த்திக் தான் இசையமைக்க உள்ளார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் கார்த்திக் முன்னதாக அரவாண், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.