திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:56 IST)

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’… சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான டீசர்

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளாராம். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் வரலாற்று திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் முன்பே வெளியாகின.

சமீபத்தில் அந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக ‘1947 ஆகஸ்ட் 16’ என சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் என்பதை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் வித்தியாசமான டீசர் வெளியாகியுள்ளது. மக்களின் வெகுளியான நகைச்சுவை காட்சிகளோடு தொடங்கும் டீசர், ஆங்கிலேயர்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லும் விதமாக அமைந்துள்ளது. இந்த டீசர் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.