வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:46 IST)

என் குழந்தைக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் : கங்கனா விரக்தி

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா. இவர் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மணிகர்னிகா - தி குயின் ஆஃப் ஜான்சி' எனும் படத்தில், ஜான்சி ராணியாக நடித்துள்ளார். 

 
ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வானம் புகழ் கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து.
 
இந்நிலையில் அண்மையில் கங்கனா ரணாவத் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கங்கானா பேசியதாவது:
 
நம்முடைய வாழ்க்கை பல சிக்கல்களைக் கொண்டது. நம் விரும்புவர்களுக்கு இப்படி பட்ட வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டது. 
 
எனது குழந்தைகளின் வாழ்க்கை நான் வாழ்ந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையை போல் இருக்கக் கூடாது என நினைக்கிறேன். ஏனென்று தெரியவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்திற்காகவும் நான் போராட வேண்டும். நான் பிறந்ததிலிருந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். 
 
எனது வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. என் வாழ்க்கை இப்படி இருப்பது எனக்கு ஒகே தான். ஆனால் நான் விரும்புவர்களுக்கும், என் குழந்தைகளுக்கும் இப்படியான வாழ்க்கை வேண்டாம் என்று தான் கூறுவேன், என்றார்.