1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2025 (10:13 IST)

கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்த்திக் சுப்பராஜ் ‘கேம்சேஞ்சர்’ கதையை எழுதியுள்ளார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் இன்று ரிலீஸாகிறது. படத்துக்கு உலகளவில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் தோல்வியால் துவண்டிருக்கும் ஷங்கரின் கேரியரை ‘கேம்சேஞ்சர்’ படம் மீண்டெழச் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள நடிகர் எஸ் ஜே சூர்யா “கேம்சேஞ்சர் கதையை மதுரை கலெக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். அதை ஆந்திராவில் நடக்கும்படி மாற்றி உருவாக்கியுள்ளார் ஷங்கர் சார். படம் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.