ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (15:42 IST)

எஸ் ஜே சூர்யாவால் தாமதம் ஆன கேம்சேஞ்சர் படம்?

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பாடலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் கிறிஸ்துமஸ்ஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுபற்றியும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படக்குழுவைக் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. அவர் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் அவரால் இந்த படத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாத சூழலில் உள்ளாராம். இதனால் இப்போது கேம் சேஞ்சர் ஷூட்டிங் தாமதம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது.