செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (13:17 IST)

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கும் ராம்பாலா

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கும் ராம்பாலா

தில்லுக்குதுட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

 
ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கிறான் குமாரு, புரூஸ்லீ படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இது தவிர ராஜீவ் மேனன், சசி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். அடங்காதே என்ற படமும் அவர் கைவசம் உள்ளது.
 
சந்தானத்தை வைத்து தில்லுக்குதுட்டு வெற்றிப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
விரைவில் படம் குறித்த செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.