நடிப்பைக் குறைத்து முழுநேர அரசியல் - சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் !
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாராத்தின் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நடிகர் சரத்குமார் முன்னாள் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தற்போது குணச்சித்திர வேடங்களில் சினிமாவில் நடித்துவருகிறார்.
அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார். அவரது சித்தி முதலான தொடர்கள் சன் டிவியில் சூப்பர் அடித்துள்ளன. இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் ஒரு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இனிமேல் சின்னத்திரையில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு, என் கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.