தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள்…!
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நான்கு படங்கள் தீபாவளி நாளில் ரிலீஸ் ஆகவுள்ளன.
ஏற்கனவே கார்த்தியின் ஜப்பான் மற்றும் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்ட் மற்றும் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கியுள்ள கிடா படமும் தீபாவளி நாளில் ரிலீஸ் ஆகிறது. இவைத் தவிர்த்து மலையாள டப்பிங் படமான பாந்த்ரா திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.