புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (10:36 IST)

தனது பெண் குழந்தைக்காக மருத்துவமனை அறையை அலங்கரித்த பிரபல நடிகர்!

மலையாள நடிகர் அசிப் அலி தன்னுடைய குழந்தைக்காக மருத்துவமனை அறையை அழகாக அலங்கரித்துள்ளார். பெண் குழந்தை பிறந்தது மூலம் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். பிரபலங்களில் நிறைய பேருக்கு இவ்வருடம் குழந்தை  பிறந்துள்ளது.

 
 
மருத்துவமனை அறையை அழகாக்க நிறைய பலூன்கள், இனிப்புகள், சாக்லெட் ஆகிய பொருட்களை கொண்டு அலங்கரித்துள்ளார். அவர் அலங்கரித்த அந்த அறையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. அதோடு ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
 
நடிகர் அசிப் அலி மற்றும் சனா கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்தனர். அவர்களுக்கு மூன்று வயது ஆண் குழந்தை  இருப்பது குறிப்பிடத்தக்கது.