1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : சனி, 13 மார்ச் 2021 (22:01 IST)

கமல் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் வரும் தேர்தலில் நேருக்கு நேர் பெரும்பாலான தொகுதிகளில் மோத இருக்கும் நிலையில் மூன்றாவது கூட்டணியாக கமல்ஹாசன் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து உள்ளன என்பது தெரிந்ததே
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளன 
 
இந்த நிலையில் இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஐஜேகே கட்சிக்கு 40 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதி உள்ள 154 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கமல் கட்சியின் கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.