செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 1 மே 2021 (18:58 IST)

நடிகர் விஜய் பெயரில் ஏழை மக்களுக்கு #விலையில்லாவிருந்தகம்…

இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. 

இந்நிலையில் இந்தப் பெருந் தொற்றுக்காலத்தில் ஏராளமான ஏழைகள், உரிய வருமானம், வேலைவாய்ப்புகள் இன்றி உணவுக்கே கஷ்டப்படும் சூழலில் உள்ளனர்.

இவர்களுக்கு சில மனிதநேய உள்ளங்கள், பிரபமுகர்கள், சமூக சேவர்கள் உதவிசெய்து வருகின்றனர்.

அந்தவகையில்,நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களும்  விஜய் ரசிகர்கள் மண்றத்தைச் சேர்ந்தவர்களுமான தஞ்சாவூர் தஞ்சை உதயம் ஸ்டுடியோஸ் திரு. கொளுந்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,  இன்று 595 வது நளாக தளபதி விஜய் #விலையில்லாவிருந்தகம்  காலை உணவை வழங்கினர். துகுறித்த  புகைப்படம் வைரலாகிவருகிறது. மக்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.