திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (13:35 IST)

பிரபல இளம் நடிகர் மரணம்....திரையுலகினர் அதிர்ச்சி

sarath chandran
பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன்(37) இவர ஐடி ஊழியராகப் பணியாற்றி வரும் போதே, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்,ஹோஸ் பெல்லிசெரியன் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பிரபலமான அவர், சில படங்களில் நடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சரத் சந்திரன்  திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.