அஜித் போன்று கார் ரேஸில் ஆர்வம் காட்டும் பிரபல நடிகை !
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் மாசூம் சங்கர். இவர் தற்போது ஆர்யா மற்றும் அவரது மனை சாயிஷாவுடன் டெடி என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
நடிகைகளில் மாசூம் சங்கர் ஒரு வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், குதிரையேற்றம் , பைக் ரேஸ் ஆகியவற்றை அடுத்து தற்போது வார் அகர் ரேஸில் ஈடுபடவுள்ளார்.
இதற்காக சில நாட்களாக அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் மும்பையில் நடக்கவுள்ள கார்ரேஷில் களமிறங்கவுள்ளார்.
ஏற்கனவே நடிகர் அஜித், துப்பாக்கி சுடுதல்,கார் ரேஸ், பைக்ரேஸில் திறமையானவாராக இருக்கும்போது நடிகைகளில் மாசூம் சங்கரின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.