புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (16:08 IST)

ரஜினியின் ''அண்ணாத்த'' படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் ! படம் வேற லெவல...

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான  கபாலி  படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த  நடிகர் விஸ்வநாத்,  அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது ’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என அறிவித்திருந்தார். அதன்படி சமீபத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் சென்றுள்ளார்

 
’அண்ணாத்த’ படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் அதன் பின்னர் முழு மூச்சாக அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த  நடிகர் விஸ்வநாத்,  அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பின்போதும்  தனக்கு கொரோனா பரிசோதனை செய்த தையும் சிறுத்தை சிவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவுட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப சென்டிமென்ட் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.