புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:56 IST)

ரசிகர் மகளின் படிப்புச் செலவை ஏற்ற பிரபல நடிகர்

Shooting
தனது ரசிகர் மகளின் படிப்புச் செலவை பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் நிலையூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஆவார். இவர் நடிகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சசிக்கி உயிரிழந்தார்.  இதுபற்றி அறிந்த ஜெயம் ரவி மதுரையிலுள்ள நிலையூர் சென்று  செந்திலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
செந்திலை இறந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜெயம்ரவி,  செந்தின் குடும்பத்தினரின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், அத்துடன்,  இரு குழந்தைகளின் கல்வவிச் செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

 நடிகர் ஜெயம் ரவியின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.