திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:09 IST)

டப்பிங் செய்யும்போது மாரடைப்பு.. தானே காரை எடுத்து கொண்டு சென்ற ஜி மாரிமுத்து..!

Actor Marimuthu
பிரபல குணச்சித்திர நடிகரும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருபவருமான நடிகர் ஜி மாரிமுத்து திடீரென சற்றுமுன் மாரடைப்பால் காலமானது திரை உலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி எதிர்நீச்சல் சீரியலுக்காக அவர் டப்பிங் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி வெளியே சென்ற அவர் தானே தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிகிறது.  
 
இந்த நிலையில் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை வரது மகள் கூறியுள்ளார்.  
 
சமீபத்தில் வெளியான ஜெயிலர் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran