’என்ன சொல்ல போகிறாய்’: சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 146 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அஸ்வின் ஜோடியாக தேஜூ அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா நடித்துள்ள இந்த படத்தில் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.