செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:44 IST)

Beast-க்கு இலவச டிக்கெட் + ஹாலிடே: தனியார் நிறுவனங்கள் அசத்தல்!!

தனியார் நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளதோடு தங்கள் ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியுள்ளது. 

 
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐடி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘பீஸ்ட்’ படத்தை பார்ப்பதற்காக விடுமுறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
எனவே சில நிறுவனங்கள் தானாகவெ முன் வந்து தங்கள் நிறுவன ஊழியர்கள் ‘பீஸ்ட்’ படம் பார்ப்பதற்காக ஏப்ரல் 13 ஆம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆம், திருப்பூரை சேர்ந்த நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அளித்ததோடு இலவச டிக்கெட்களையும் வழங்கியுள்ளது.  
 
இதேபோல், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனமும், பி ட்ரி நிறுவனமும் நாளை விடுமுறை அறிவித்துள்ளதோடு தங்கள் ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியுள்ளது.