செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (20:56 IST)

கமலின் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகல்!- என்ன காரணம்?

கமலின் தக்லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தக்லைஃப். இவர்கல் இருவரும்  நாயகன் படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம்ரவி,  திரிஷா, துல்கர் சலான் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
 
இப்படத்தை ரெட்ஜெயிண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இப்படத்தின் ஷூட்டிங்  சென்னையை அடுத்து, செர்பியாவில் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில்,  இப்படத்தில் நடிக்க  ஒப்பந்தமான நடிகர் துல்கர்சல்மான் மற்ற படங்களில் நடிக்க வேண்டி இருப்பதாலும், தக்லைஃப் படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க முடியாது என்ற காரனத்தாலும், இப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகிறது. அவருக்கு பதிலாக வேறு நடிகரை படக்குழு அறிவிக்கும் என தெரிகிறது.