புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (14:46 IST)

“என் அப்பாவுக்கே அப்பாவாக நடிக்கலாம்…” மம்மூட்டியுடன் நடிப்பது குறித்து துல்கர் சல்மான் பதில்!

நடிகர் துல்கர் சல்மான் தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம் , தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படமான சீதாராமம் மற்றும் இந்தி படமான சுப் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘அவரது தந்தை மம்மூட்டி உடன் இணைந்து நடிப்பது பற்றி” கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் “நான் எப்போதும் அதற்கு தயாராக உள்ளேன். ஆனால் அவர் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை. எனக்கு இப்போதே முடியெல்லாம் நரைக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். அவருக்கு அப்பாவாக கூட நான் நடிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.