திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:29 IST)

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையிடம் விசாரணை

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டியாவிடம் இன்று இரண்டாவது நாளாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

 கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் மறைவுக்கு பின்னர் பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர்களுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டியாஸ் ரேவ் பார்ட்டியில் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாக அவரது செல்போன் லேப்டாப்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி அவரிடம்  நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதேபோல் இன்று அனன்யா பாண்டேவிடம் 2 வது நாளாக 4 மணி நேரத்திற்கு மேல் போதைப்பொருள் தடுப்புபிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.