1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:05 IST)

5 மணி நேரமாக இயக்குனர் அமீரிடம் விசாரணை

ameer
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குனர் அமீர் விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
 
ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு,போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் நண்பரான இயக்குனர் அமீர் இன்று  ஆரஜாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தன் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜரானார்.
 
அப்போது, ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு பற்றி அமீரிரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

 போதை பொருள் வழக்கு தொடர்பாக 5 மணி நேரமாக அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
விசாரணையின்போது  இயக்குனர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகிறது.