திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (18:29 IST)

இப்போது திரையரங்கில் வெளியாகும் திருஷ்யம் 2!

ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற திருஷ்யம் 2 திரைப்படம் இப்போது அரபு நாடுகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் குறைந்துள்ள நிலையில் மீண்டும் வளைகுடா நாடுகளில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் ஐக்கிய அரபுகள் அமீரகம், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் திருஷ்யம் 2 படம் ரிலீஸாக உள்ளது.