சூரியுடன் பைக்கில் செல்லும் சிவகார்த்திகேயன்… டான் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர்.
கொரோனா காரணமாக கோயம்புத்தூரில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது பாதிப்புகள் குறைந்திருந்தாலும், சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகமாக இருப்பதால் சென்னையிலேயே அடுத்த கட்ட படப்பிடிப்பை இப்போது சென்னையில் நடந்து வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.