செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (10:07 IST)

சபரிமலை செல்ல பிடிவாதம் பிடிப்பதா? காயத்ரி ரகுராம் எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள அரசு அறிவித்தது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 
 
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல முயற்சிக்கும் பெண்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
 
“சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றிய பாரம்பரிய வழக்கங்களில் நம்பிக்கை இல்லாத பெண்கள் எதற்காக சபரிமலைக்கு செல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அரசியல் காரணங்களால் மட்டுமே அங்கு செல்ல அடம்பிடிக்கிறார்கள். இதனால் எதை நிரூபிக்கப்போகிறீர்கள்?. உங்களுக்கு அய்யப்பன் மீது நம்பிக்கை இருந்தால் பல வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுபோல் 50 வயது கடந்த பிறகு அங்கு செல்லுங்கள்.”
 
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.