திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:34 IST)

ரைஸாவிடம் 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு… மருத்துவர் தடாலடி!

ரைசாவிடம்  5 கோடி ரூபாய் கேட்டு அழகு சிகிச்சை நிபுணர் பைரவி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்குஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசுக்கு தற்போது பதிலளித்துள்ள மருத்துவர் பைரவி, ‘சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரைசா வில்சன் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதில் அனுப்பியுள்ளார். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதே போல இப்போது  5 கோடி ரூபாய் கேட்டு ரைசா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்.