வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (19:37 IST)

மறைந்த நடிகர் சரத்பாபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு நேற்று காலமானார். இதனை அடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள சரத்பாபு வீட்டிற்கு இன்று அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்றும் சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர்  சரத்பாபுவின் சொத்து மதிப்பு தோராயமாக மொத்தம் இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.