ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:48 IST)

‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியின் சாதனை என்ன தெரியுமா?

‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியின் சாதனை ஒன்று இப்போது தெரியவந்துள்ளது
 
சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த நிகழ்ச்சி பெற்றது. இதைத் தொகுத்து வழங்கிய உமா, எல்லோருடைய குடும்பங்களிலும் உறுப்பினராகவே மாறினார். அந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடித்த நபராக இருந்தார் பெப்சி உமா.
 
தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை என்றாலும், இன்றும் அந்த நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் சாதனை ஒன்று இப்போது தெரியவந்துள்ளது. இந்திய சேனல்களின் முதல் டெலிபோனிக் டயல் ஷோ இது என்பதுதான் அந்தச் சாதனை.
 
அதாவது, ரசிகர்கள் போன் செய்து பெப்சி உமாவிடம் பேசுவார்கள் இல்லையா? அப்படி ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு போன் செய்து பேசிய முதல் நிகழ்ச்சி இது.