வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (11:12 IST)

ஆர்யாவின் ’டெடி’ ஓடிடி ரிலிஸ்… தேதியை மாற்றிய படக்குழுவினர்!

ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அடுத்த படம்தான் இது டெடி. டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மார்ச் 19 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு வாரம் முன்னரே மார்ச் 12 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. மேலும் அதன் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாக உள்ளது.