புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (17:19 IST)

முடக்கப்பட்ட சமூக வலைதள கணக்கு மீட்பு....நடிகை குஷ்பு டுவீட்

தமிழ் சினிமாவில் நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்பு முடக்கப்பட்ட தனது சமூக வலைதளக் கணக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில்  90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால், காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு உரிய பதவிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கவில்லை என கூறப்பட்ட நிலையில் கடந்தாண்டு பாஜகவில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி தோல்வியுள்ளார்.

இந்நிலையில் , நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி டிஜிபி டிஜிபியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யாரென்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்தது

இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் அளிக்கும் பதிலை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை சென்னையில் போலீஸார் போலீசார் சைபர் கிரைம் போலீசார் எடுப்பர் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று நடிகை குஷ்பு தனது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், முடக்கப்பட்ட தனது டுவிட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்த தமிழக டிஜிபி மற்றும் போலீஸாருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.