புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:19 IST)

போயி வேற வேல இருந்தா பாருங்கடா? – தலைப்பாக பதிவு செய்ய சொன்ன இயக்குனர்!

சி எஸ் அமுதன்

தமிழ்ப்படம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் இயக்குனர் சி எஸ் அமுதன் விஜய் சேதுபதி சொன்ன ஒரு வார்த்தையைத் தலைப்பாக பதிவு செய்ய சொல்லி தயாரிப்பாளர் சஷிகாந்திடம் சொல்லியுள்ளார்.

சமீபத்தில் பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீடு, நடிகர் விஜய் வீடு என வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனைக்கான காரணம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் கல்லூரின் பெயர் ஒன்று அடிப்பட்டது.  அதோடு, திரையுலகில் உள்ள பலரும் குறிப்பாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி ஆகியோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாகவும், மதமாற்றத்தில் பிறரை ஈடுபடுத்த கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப் படுவதாகவும் கூறப்பட்டது. 

மேலும், பிகில் பணத்தில் கிடைத்த கருப்பு பணத்தின் மூலம் மதமாற்ற வேலைகள் ஜரூராக நடந்து வந்ததாகவும் இதனால் தான் இந்த திடீர் ஐடி ரெய்ட் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்ட விஜய் சேதுபதி இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு,போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..’. என்று பதிவு செய்தார். இந்த வாக்கியம் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக அனைவரும் இதைப் பயன்படுத்தி மீம்ஸ்களைப் பறக்க விட்டனர்.

இந்நிலையில் எதையுமே கேலியாக எடுத்துக் கொள்ளும் இயக்குனர் சி எஸ் அமுதன் இந்த வாக்கியத்தைக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் சஷிகாந்திடம் இதை உடனடியாக தலைப்பாக பதிவு செய்யுங்கள் என சொல்லியுள்ளார். அதற்கு அவரும் ‘கண்டிப்பாக ‘ எனப் பதிலளித்துள்ளார்.