ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:08 IST)

பிரபல இயக்குனர் சேதுமாதவன் காலமானார்… கமல் அஞ்சலி!

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மலையாள சினிமாவைப் பெருமைகொள்ள தக்க பல படைப்புகளை படைத்தவரும் தனது படங்களுக்காக 10 முறை தேசிய விருதை பெற்றவருமான இயக்குனர் சேதுமாதன் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 90. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் நாளை நமதே, நம்மவர் மற்றும் மறுபக்கம் ஆகிய முக்கியமான படங்களை இயக்கியவர். கமல்ஹாசனை மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் சேதுமாதவன்.

அவரின் மறைவு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில் ‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.’ எனத் தெரிவித்துள்ளார்.